பாரதியார் பாடல்கள்

      பராசக்தியிடம் காணி நிலம் 
வேண்டும் …….. பாரதியார் 


காணி நிலம் வேண்டும் – பராசக்தி 
காணி நிலம் வேண்டும் – அங்கு,
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேணும் – அங்கு,
கேணி யருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்புவர வேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற்பட வேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல்வர வேணும் .பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா !நின்தன்
காவலுற வேணும் – என்தன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும் .எவ்வளவு இனிமையான கவிதை மிக அழகாக தனது ஆவலை கூறி இருக்கிறார் காணி நிலமும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்றும் அதிலும் , இந்த நாடு நலம் பெற வேண்டும் . அவருக்கினை அவர்தான் .

                                                          திருவடி முத்துகிருஷ்ணன் 

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →