சிவமே ஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

திரை இசையில் ……….. (என்னை கவர்ந்த) பக்திபாடல்கள்

பாடல் வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 

கங்கை அணிந்தவா 
கண்டோர் தொலும் விலாசா 
சதங்கை ஆடிடும் பாத வினோதா 
லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீ தா 

தில்லையம்பல நடராஜா 
செழுமை நாதனே பரமேசா 
அல்லல் தீர்த்தாடவா வா வா
அமிழ்தானவா ( தில்லையம்பல )

எங்கும் இன்பம் விளங்கவே …
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே 
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா வா ( தில்லை )
              
பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதி பாடும் 
கலையலங்கார பாண்டியராணி நேசா 
மலை வாசா மங்கா மதியானவா ( தில்லை)படம். சிவகவி
பாடல். பாபநாசம் சிவன்
பாடியர் : M K தியாகராஜ பாகவதர் 

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…………….
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து………….. – 
சுப்ரமணிய  சுவாமி உனை மறந்தார் – அந்தோ………….
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…………… – சுப்ரமணிய
சுவாமி உனை மறந்தார்………….. – அந்தோ
 அற்பப் பணப் பேய் பிடித்தே…………… அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
அற்பப் பணப் பேய் பிடித்தே…………. அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்………..

நாவால் பொய் மொழிவார் – பொருள் விரும்பி
நாவால் பொய் மொழிவார் – தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் – அந்தோ………….
நாவால் பொய் மொழிவார் – தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் – உந்தன்

பாவன நாமத்தை ஒரு பொழுதும் பாவனை செய்தறியார்

அந்தோ விந்தையிதே…………… அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே – மாந்தர்
அந்தோ விந்தையிதே…………. அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே – இவர்
சிந்தை திருந்தி உய்ய – குகனே உந்தன்
திருவருள் புரிவாயோ…………… 

சிந்தை திருந்தி உய்ய – குகனே உந்தன்
திருவருள் புரிவாயோ……………. ஓ……………………

படம். அசோக்குமார்
பாடல். பாபநாசம் சிவன்

பாடியவர் : M K தியாகராஜ பாகவதர் 


பூமியில் மானிட ஜென்ம மடைந்து மோர்
புண்ணிய மின்றிவிலங்குகள் போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணிய மின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ………
காலமும் செல்ல மடிந்திடவோ……….
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல்வினை யால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயா நிதியாகிய
சத்திய ஞான தயா நிதியாகிய
புத்தனை போற்றுதல் நம் கடனே…………..
புத்தனை போற்றுதல் நம் கடனே……படம்.திருநீலகண்டர்
பாடல்.பாபநாசம் சிவன்

பாடியவர் : M K தியாகராஜ பாகவதர் தீன கருணாகரனே நடராஜா……………………..நீலகண்டனே!
தீன கருணாகரனே நடராஜா……………………..நீலகண்டனே!
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா……………நீலகண்டனே


மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
மௌன குருவே………ஹரனே
எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா………..நீலகண்டனே


ஆதியந்தம் இல்லா ஹரனே…….ஆ………..
…………ஆ………….ஆ…………
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி மேனியனே பரமேஸா நீலகண்டனே
பாதி மதி மேனியனே பரமேஸா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா……….நீலகண்டனே……….
                       இறை பணியில் 
        
                     திருவடி முத்துகிருஷ்ணன் 

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →