அடியேன் எழுதிய பாடல்கள் 

அடியேன் எழுதிய பாடல்கள் 

                                                       சிவமயம் 

                                                 சிவமேஜெயம் 

குருவே சரணம்     பட்டினத்தாரே சரணம்     குருவே துணை 

 


கிட்டியதை எண்ணி திருப்தி காணாமல் தனக்கு 
கிட்டாததை எண்ணி வருந்தி வீனாற் கழித்து 
எட்டாத கனிக்கே பேராவல் கொண்டு வாழ்வாரோடு 
ஒட்டாத வாழ்வை தருவாய் கயிலை நாதனே .

ஊழ் வினையா பாழ்வினையோ என்னுடன் வந்த 
முன் வினையோ பின்வினையோ உடனிருக்கும் 
நல் வினையோ தீவினையோ நான்செய்த வல்வினையோ 
நீள் சடைநாதனை எண்ணாமல் இருந்ததென் தொல்வினையே .

உண்ணா துறங்காதிருக்க மறந்தாயா மடநெஞ்சே மயக்கும் 
கண்ணுடையாரை கூடாமலிருக்க மறந்தாயா நற்கதியருளும் 
அண்ணாமலை யாரின்திருவடி மலர்களை போற்றி யிருக்க
என்னாமலிருந் தனையே பித்துப் பிடித்த என் நெஞ்சமே .   

          

    என்றும் இறை பணியில் 

  சிவமேஜெயம்   – திருவடி முத்துகிருஷ்ணன்                                                 

   சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →