அடியேன் எழுதிய பாடல்கள் …

                                           சிவமயம் 
                                      சிவமேஜெயம் 

குருவே சரணம்        பட்டினத்தாரே சரணம்         குருவே துணை 

 


ஆதிசித்த நாதனை அநாதியான மூலனை 
ஆதியந்த மில்லாஎங்கள் ஆலமுண்ட கண்டனை 
மாதிலொரு பாதியனை மாயை அறுக்கும் ஈசனை 
சோதிரூப மானவனை எப்போதும் சிந்தித்திரு நெஞ்சே  .


நல்லாரைக் கூடிநயம்பட வாழாமல் தீங்கு செய்யும் 
பொல்லாரைக் கூடி பொழுதினை கழித்து பாரமாய் வாழுமிப் 
பொல்லாப் புலையனும் நாயினுங்கீழ் பிறப்பெடுத்தயென் 
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கயிலை நாதனே  .


போதும் பிறந்திறந்து அல்லல்படும் வாழ்வு இனியொரு 
போதும் பிறக்க இசைவியோ மட நெஞ்சே பிறந்தால் எப் 
போதும் ஆனந்தக் கூத்தனை சிந்தையில் நினைந்திரு அப் 
போதுபிற வாநிலையடைந்து பேரின்பத்தில் திளைத்திருப்பாய் . 

                                    
                                      – திருவடி முத்துகிருஷ்ணன் 


                                          சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →