அட்ட வீரட்டானம் ….

   திருவழுவூர் 

முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதிய தாம் பல தேவரும்
அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.


                      – திருமூலர் திருமந்திரம் 


சிவபெருமான் ஆற்றலை உணராது அவன் பெருமையை அறியாது மற்ற தேவர்களுள் ஒருவன் என்று எண்ணிய முனிவர்கள் சிலர்  தமது ஆற்றலை பெரிதாக நினைத்து வேள்வி செய்து   வேள்வித்தீயில் கஜமுகாசுரன் என்னும் யானை உருவம் கொண்ட அரக்கனை தோற்றுவித்து அதனை சிவபெருமானிடத்து ஏவினர் . எம்பெருமான் விரல் நகத்தால் யானையை அழித்து தேவரும் , உமையாளும் பெருமானுடைய கோபம் கொண்ட மேனியின் பேரொளியை கண்டு அஞ்சும் போது யானையின் தோலை போர்வையாக போர்த்தி நின்றார் .                             சிவமேஜெயம் – திருவடிமுத்துகிருஷ்ணன்  


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →