அட்ட வீரட்டானம் …….
                                                              திருக்கடவூர் 

காலனை உதைத்தது 

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முன்
கால் உற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

                              –   திருமூலர் திருமந்திரம் 


மூலாதாரத்தில் தொடங்கி நடுதண்டின் வழியாக உச்சி எனப்படும் சகஸ்ரஹாரம் அடைதல் அகவழிபாடு ஆகும் . உச்சியில் கவனித்தால் ஒப்பில்லாத ஈசனின் திருவருள் கிட்டும் அவ்வாறு அகவழிபாடு செய்து சிவசிந்தையிலே திளைத்து இருக்கும் மார்கண்டேயனின் உயிரை பறிக்க வந்த எமகாலனை ஈசன் காலால் உதைத்து பக்தனை காத்த தலம் திருக்கடவூர் . ஈசன் பதத்தை பற்றி இருத்தலே காலனையும் கடந்து போகும் யோகமாகும் . 
  


                 சிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன் 


    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →