சிவத் தலங்கள் பற்றி தெரிய வேண்டிய தகவல்கள்

சப்த விடங்கத் தலங்கள்

1. திருவாரூர்     வீதிவிடங்கர்    அசபா நடனம்
2.திருநள்ளாறு    நக விடங்கர்   உன்மத்த நடனம்
3. திருநாகைக் காரோணம்   சுந்தர விடங்கர்  பாராவார தரங்க நடனம் 
4. திருக்காரவாசல்  ஆதி விடங்கர்   குக்குட நடனம்
5. திருக்கோளிலி   அவனி விடங்கர்  பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   நீல விடங்கர்  கமல நடனம்
7. திருமறைக்காடு  புவனி விடங்கர் ஹஸ்தபாத நடனம்

     

காசிக்கு சமமாக சொல்லப்படும் சிவாலயங்கள்

1.திருவெண்காடு
2.திருவிடைமருதூர்
3.திருவாஞ்சியம்
4.மயிலாடுதுறை
5.திருச்சாய்க்காடு
6.திருவையாறு


தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

அப்பர் பெருமானால் பாடப் பெற்றது                28
திருஞான சம்பந்த பெருமான்   பாடியது         110
சுந்தரமூர்த்தி பெருமான் பாடியது                    25
அப்பராலும் , சுந்தரராலும் பாடப் பெற்றது         2  
அப்பரும் , சம்பந்தரும் பாடியது                       52
சம்பந்தரும் , சுந்தரரும் பாடியது                      13
மூவராலும் பாடப் பெற்றது                              44

        ஆக மொத்தம் 274 தேவாரம் போற்றும் தலங்கள்
பஞ்ச பூத தலங்கள்

1. திருவாரூர் . திருக்காஞ்சிபுரம்        – நிலம்
2.திருவண்ணாமலை                         – நெருப்பு 
3. திருவானைக்கா                             – நீர்
3. சிதம்பரம்                                       – ஆகாயம்
4.திருக்காளத்தி                                  – காற்றுபஞ்ச சபைகள்

1.திருவாலங்காடு           –  இரத்தின சபை
2.சிதம்பரம்                     – கனக சபை
3.மதுரை                        – ரஜித சபை
4.திருநெல்வேலி            – தாமிர சபை
5.திருக்குற்றாலம்           – சித்திர சபை


முக்தி அளிக்கும் சிவத் தலங்கள்

1.திருவாரூர்                     – பிறக்க முக்தி
2.திருவண்ணாமலை        – நினைத்தாலே முக்தி
3.சிதம்பரம்                       – தரிசிக்க முக்தி
4.காசி                               –  இறக்க முக்தி


 அட்ட வீரட்டானத் தலங்கள் 

1 . திருக்கண்டியூர்      – பிரம்மன் சிரம் கொய்தது 
2 . திருக்கோவலூர்     – அந்தகாசுர வதம் 
3 . திருவதிகை           – திரிபுரம் எரித்தது 
4 . திருப்பறியலூர்      – தக்கன் வேள்வி தகர்த்தது 
5 .  திருவிற்குடி         – சலந்திரனை அழித்தது 
6 . திருவழுவூர்          – யானையின் தோலை  உரித்து போர்த்தியது 
7 . திருக்குறுக்கை      – காமனை தகித்தது  
8 . திருக்கடவூர்          – காலனை உதைத்தது 
 
ஆகிய இந்த எட்டுத் தலங்களும் ஈசனின் வீர செயல்களை பறை சாற்றும் அட்ட வீரட்டானத் தலங்களாகும் .

                   
            சிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன் 


  சிவத்தை போற்றுவோம்  !! சித்தர்களை போற்றுவோம் !! 
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →