பட்டினத்தார் பாடல்கள்

ஞான குரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள் ……

 

பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.

நல்ல குணங்களை பெறாதவன் , நன்னெறிகளை கடைபிடிக்காதவன், ஐந்து புலன்களை அடக்கி அதனை வெற்றி கொள்ள இயலாதவன் , நன்மை ஓதும் நூல்களை விரும்பி கற்காதவன் , உண்மையான சிவனடியாரிகளிடத்து நட்பு பாராட்டதவன் , சத்தியம் உரைக்காதவன்,உன்றன் தாமரை மலரை ஒத்த திருப்பாதங்களில் அன்பு இல்லாதவன் இந்த மண்ணில் எதுக்காக இப்பிறவி எடுத்தேன் கச்சியில் உறைந்தருள் செய்யும் ஏகம்பநாதனே .

பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

பூமியில் பிறக்கின்ற போதும் கையில் எதுவும் கொண்டு வரவில்லை. இறந்து போகும்போதும் கொண்டு எதுவும் போகப் போவதுமில்லை . பிறப்பிற்கும் , இறப்பிற்கும் நடுவே நீங்கள் அனுபவித்திருக்கும் இந்த செல்வமானது சிவன் அருளால் கிடைத்தது என்று தன்னை நாடி வந்தவர்கட்கு எதுவும் கொடுக்காது வீனாக உயிரை விடும் கீழ் மக்களுக்கு அடியேன் எது சொல்வேன் திருக்கச்சியில் அருளும் ஏகம்பனே . 

 

 

                                     – சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 

 

                       சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை போற்றுவோம் !!! 

 

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →