தேவாரப்பாடல்கள்..

தேவாரப்பாடல்கள்..

 

                மணிவாசக பெருமான் அருளிச் செய்த

                      

                                        திருவாசகத் தேனிலிருந்து ..

 

    சில  துளிகள் …….

                                                                

                                            natarajar2

 

                                                                         

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

              கடையேனை நின் பெருங் கருணையினால் வழிய வந்து ஆண்டு கொண்டருள் செய்த விடையாகிய காளை வாகனத்தை உடையவனே ,அடியேனை விட்டு விடுவாயோ ? வலிமை உடைய புலியின் தோலை உரித்து அதனை ஆடையாக கொண்டவனே நிலையான திருஉத்தரகோச மங்கைக்கு அரசனே , செஞ்சடை உடையவனே , அடியேன் சோர்ந்தேன் எம்பெருமானே , என்னை தாங்கிக் கொள்வாயே . 

 

மறுத்தனன் யானுன் அருளறி யாமையில் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தாம் பொய்யினையே.

 

                            எம்பெருமானே , அறியாமையினால் உன் திருவருள் பெருமையை வேண்டாமென்று மறுத்தேன் . மாசு சிறிதும் இல்லா மாணிக்கமே  நாயேன் அறியாமையால் செய்த தவறுக்கு நீ என்னை வெறுத்து ஒதுக்கி விடாதே , உத்தரகோச மங்கைக்கு அரசனே , பெரியவர்கள் சிறிய நாய்கள் குற்றத்தை பொறுத்து மன்னிப்பது போல தேவரீர் என் குற்றத்தை பொறுத்து வினை முழுவதும் அழித்து என்னை ஆட்கொண்டருள வேண்டும் . 

            

                              சிவமேஜெயம் –  திருவடி முத்துகிருஷ்ணன் 

              சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →