சித்தர் பாடல்கள் …….. ஞானச் சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

சித்தர் பாடல்கள் ……..

 

         ஞானச் சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

 

 மனோன்மனிக் கண்ணிகள் என்று மனோன்மணியம்மையை போற்றி யோகம் ,

வாசி , ஞானம் என்று அனைத்தையும் உள்ளடக்கி நூறு கண்ணிகளாக இயற்றியுள்ளார் .

உமையாள் பாதம் காப்பு 

ஆதியந்தங் கடந்தவுமையாள் தன் பாதம்  

     அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் 

சோதியந்தங் கடந்தகண பதியின் பாதம்

      தொழுதிறைஞ்சிக் கரங்குவித்துப் போற்றி செய்து 

வாதியந்தங் கடந்தநந்தி பாதம் என்றும்  

         வாலைமனோன் மணியம்மை பாதம் என்றும்

ஓதியந்தங் கடந்தண்டம் இரண்ட தாக 

         ஒன்றுமறி யாவறி ஞனுரை செய்தானே .  

 

மனோன்மணி கண்ணி

மெய் தொழவு மேலும் நந்திகேஸ்வரனைக்

கைதொழவுங் கனவு கண்டேன் மனோன்மணியே  .                         1

கோப்பாகவும் உனையான் கொண்டாடிப் பாடவும் நீ

காப்பாக வுங் கனவு கண்டேன் மனோன்மணியே     .                         2

பெண்கள் நிர்த்தத் தொடுடையான் பிரியா மனம் புனரக்

கண்களுறங் காக்கனவு கண்டேன் மனோன்மணியே  .                    3

மலர்ந்திருக்கும் பொற்கமல மணவறையில் இருவருங்கை

கலந்திருக்கவுங் கனவு கண்டேன் மனோன்மணியே                       4

மெய்மஞ்சட் குளிப்புங்கண் விழிப்புமெக் களிப்புமெனைக் 

கைமிஞ்ச வுங்கனவு கண்டேன் மனோன்மணியே                             5

மைதீட்ட வுங்கயற்கண் மலரின் மலர்முலையிற் 

கைபூட்ட வுங்கனவு கண்டேன் மனோன்மணியே                              6

மெய்தழு வுமிருவர் மெய்யோடு மெய்நெருங்கக் 

கைதெழுவ வுங்கனவு கண்டேன் மனோன்மணியே                         7

வாமப் பாலைப் பெருக மறுவாலி பம்வருக

காமப் பாலுண்ணக் கனவு கண்டேன் மனோன்மணியே                   8

பாலனா கவுங்கான்ற பாலுணவும் என்னைவிட்டுக் 

காலனே கவுங்கனவு கண்டேன் மனோன்மணியே                             9  

வடியா அருளமிர்தம் வடியவடி யக்குணங் 

குடியா ரொடு கனவிற் குடித்தேன் மனோன்மணியே                         10

 

    குணங்குடியார் பாடல்கள் தொடரும்  ….

 

சிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன் 

 

சிவத்தை போற்றுவோம் !!    சித்தர்களை போற்றுவோம்  !! 

ஓம் ஸ்ரீ பட்டினத்தாரே சரணம் !!

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →