1       பசுக்களை கோமாதா என்று அழைத்து வழிபாடு செய்யும் நம் திருநாட்டில் தான் மாமிசத்துக்காக பசுக்கள் விற்கப்படுகிறது பசுவதை பெரும்பாவம் என்று வேதம் சொல்கிறது . நம்மால் முடிந்தவரை அறக்கட்டளையின் மூலம் மாமிசத்திற்கு விற்கும் பசுக்களை வாங்கி கோசாலை அமைத்து பசுக்களை பாதுகாப்பது .

2      காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்று ஈசனால் உபதேசம் பெற்று திருக்கோவில்கள் பல தரிசனம் செய்து நிலையாமை உணர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து , எந்தச் சித்தருக்கும் இல்லாத பெரும் சிறப்பாய் தன் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாக்கி திருவொற்றியூர் உறைந்து அருள் செய்யும் எம் குருநாதர் மகான் ஸ்ரீ பட்டினத்தாருக்கு திருக்கோவில் எழுப்பி அங்கு வழிபாடு செய்வது .

3       நம்பெருமான் உறைந்தருள் செய்யும் திருக்கோவில்களில் எண்ணற்ற கோவில்கள் ஒருகால பூசை கூட நடைபெறாமல் , பாதுகாக்க  வேண்டிய திருக்கோவில்கள் சிதிலமடைந்து இருக்கிறது அவ்வாலயங்களுக்கு பூசைக்கு பொருளுதவியும் உழவாரப் பணிகளும் , செய்து அவன் அருளால் ஆலயங்களை செப்பனிடுவது

4      கல்வி என்பது கைக்கு எட்டா கனிபோல இருக்கும் இந்த காலத்தில் மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய படிப்புக்கு  பொருளுதவி செய்வது , தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுத்து பொருள்கள் வழங்கி அவர்களுக்கு உதவி செய்வது . சைவ   சித்தாந்த  வகுப்பு நடத்தி  நமது சைவ சமயத்தின் மாண்பையும் ஈசனின் பெருமைகளையும் மாணாக்கர்களுக்கு அறியும் படி செய்வது .

5        திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்ற வாக்கிற்கேப்ப , ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு சென்று அவர்களுக்கு பனி செய்து  அவர்களுக்கு திருவமுது வழங்குவது , அவர்களுக்கு தேவையான பொருள்கள் நமக்கு இயன்றதை வாங்கி அவர்கள மனம் மகிழும் வண்ணம் வழங்குவது . ஈசனார் இன்னும் என்ன பணிகள் எல்லாம் நம்மால் செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அவன் அருளால் அப்பணிகளை சிரம் தாங்கி செய்வது .

Bank Details

Name : Sivamejeyam Foundation

Bank  : Fedaral Bank

Acc    : 11910200075338

Branch : Thoothukudi

IFSC Code : FDRL0001191

PAN NO : AAQTS5580B

தொடர்புக்கு :

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்
4/169 B MAC கார்டன் ,
ஸ்டேட் பேங்க் காலனி
தூத்துக்குடி – 2

9944091910, 9842154171