திருவாசகத்திலிருந்து 

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .
மணிவாசக பெருமான் அருளிய 
   திருவாசகத்திலிருந்து 
 
பாடல் 7
 
 
அன்னே இவையும் சிலவோ  பலஅமரர் 
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய் 
என்னானை என்னரையன் இன்னமுதன் டின்று எல்லோமும் சொன்னோங்கேள்  வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்நெஞ்சப் பேதையர் போல் வாளாக் கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர்  எம்பாவாய்.
 
தாயே உனது விளையாட்டுகளில் இவையும் சிலபோலும் .தேவர்களால் எண்ணிஅறியமுடியாதவனும் ஒப்பற்றவனும் பெரியபுகழ் உடையவனும்,ஆகிய பெருமானது அடையாளங்களாக விளங்கும் இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்று ஒலித்தாலும் சிவசிவ என்று சொல்வாயே”தென்னாடுடைய சிவனே”என்று கூறிமுடிப்பதற்குள்  நெருப்பில் இட்ட மெழுகுபோல உருகுவாயே,ஆனால் இப்பொழுது நாங்கள் தனித்தனியே எம் தலைவன், என் அரசன் ,இனிய அமுதன் என்றெல்லாம் அவனைப் புகழ்ந்து பேசியபிறகும் இன்னும் காதில் விழாதவள்போல் உறங்குகின்றாயே,அன்பு இல்லாத கல்நெஞ்சம் உடைய அறிவு இல்லாதவர்  போலப் படுக்கையில் கிடக்கிறாயே,உறக்கம் என்ன  அத்துணைச் சிறப்புடையதா? என்று பெண்கள் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
 
                                                                                 இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                                                              
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →